இந்தியா துணைக்கண்டத்தில் இதுவரை காணப்படாத அரிய வகை தாவரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வெள்ளை வாய் பகல் மலர் (white mouth dayflower) என்று அழைக்கப்படும் `கம்மெலினா எரெக்டா' என்ற தாவர இனம். குண்டூர் மாவட்டத்தில் உள்ள கொண்டவீடு கோட்டையைச் சுற்றியுள்ள காடுகளில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மூலிகையானது அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியா போன்ற நாடுகளிலேயே காணப்படுகிறது. எனவே, கொண்டவீடு கோட்டையும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளிலும், காலனித்துவ காலத்தில் ஆங்கிலேயர்கள் மற்றூ பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால், இந்த மூலிகைத் தாவரம் இது அவர்களால் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என மூலிகையை ஆராய்ச்சி செய்த தாவரவியலாளரான எம்.மகேந்திர நாத் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ``இந்த வனப்பகுதியில் சுமார் 400 வகையான தாவரங்கள் உள்ளன. அவற்றில் 50 சதவிகிதம் மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன. எனவே, வனத்துறை இந்தப் பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் கணக்கெடுப்பை மேற்கொண்டால், இது எதிர்கால ஆராய்ச்சிக்கு பங்களிக்கக்கூடும்" என்றும் கூறினார்.
வனத்தைச் சுற்றியுள்ள மூலிகைகள் பொதுவாக நோய் தீர்க்கும் சக்தியைப் பெற்றுள்ளது. அதாவது மூலம், வைரஸ் காய்ச்சல், முதுகுவலி மற்றும் வயிற்றுப்போக்கு, சிறுநீரக நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அரிய மூலிகைகள் இங்கு அதிகம் இருப்பதால் மருத்துவ தாவர பூங்காவை அமைக்கவும், மலையுச்சியில் ஆயுர்வேத சுகாதார மற்றும் புத்துணர்ச்சி மையத்தை அமைக்கவும், ஒரு வருடத்துக்கு முன்பு இங்கே சுற்றிப் பார்க்க வந்த 35 நிபுணர்கள் கூறியுள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/e4dT6oL
0 Comments