இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ``இஸ்லாமியப் பெண்கள் யாரும் அவர்களின் விருப்பப்படி ஹிஜாப் அணிவதில்லை. அந்த பெண்கள் ஹிஜாப் அணியக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
முத்தலாக் முறையை இஸ்லாமியப் பெண்கள் விருப்பப்பட்டா ஏற்றுக்கொண்டார்கள். இது குறித்து அந்த பெண்களிடமே கேளுங்கள். முஸ்லிம் பெண்களும் முத்தலாக்கை விரும்பவில்லை. அது பற்றிப் பேசும்போது அவர்களின் வலியைப் நான் பார்த்திருக்கிறேன். ஜான்பூரைச் சேர்ந்த ஒரு பெண் முத்தலாக்கை ரத்து செய்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
ஒருவர், தான் அணியும் உடையைத் தேர்வு செய்வது என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கு உட்பட்டது. அதில் மற்றவர்கள் தலையிட முடியாது. என்னுடைய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளையோ அல்லது கட்சியில் இருப்பவர்களையோ நான் காவி அணிந்து வர வற்புறுத்த முடியுமா? அப்படி என்னால் கூற முடியாது. அனைவருக்கும் சுதந்திரம் இருக்கிறது" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/PiofxuA
0 Comments