கர்நாடக மாநில பாடப்புத்தகத்தில் 'தபால்காரர்' என்பதைக் குறிக்க, மலையாள நடிகரான குஞ்சக்கோ போபனின் படம் இடம்பெற்றிருந்ததாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இந்த சர்ச்சை குஞ்சக்கோவின் இன்ஸ்டா பதிவில் ஆரம்பித்தது. "கர்நாடகாவில் அரசு பணி கிடைத்துவிட்டது. இத்தனை காலமாக லெட்டர் கொடுத்து வந்த தபால்கார்களின் பிரார்த்தனை" எனப் பகடியாக அவர் பதிவிட்டு இருந்தார்.
2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'Oridathoru Postman" என்கிற படத்தில் கிராமத்தில் பணிபுரியும் தபால்காரராக குஞ்சக்கோ நடித்திருந்தார். அந்த படத்தின் காட்சி தான் பாட புத்தகங்களில் இடம்பெற்றிருந்ததாக சொல்லப்பட்டது.
"கர்நாடக அரசின் எந்தவிதமான பாடப்புத்தக்கத்திலும் அந்தப் படம் இடம்பெறவில்லை" என கர்நாடக பாடநூல் சொசைட்டி மறுப்பு தெரிவித்திருக்கிறது. இந்தப் படம் இடம்பெற்றுள்ள புத்தகம் Hubbali என்கிற தனியார் பதிப்பகத்தால் அச்சிடப்பட்டது.
"கல்வியின் தரம் பி.ஜே.பி. அரசில் சிதைந்து வருகிறது.ஏற்கெனவே பாடங்களின் சிலபஸ் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாட புத்தகங்களில் கமிட்டி கொண்டு முறையாக ஆராயாமல், இன்டர்நெட்டில் கிடைக்கிற படங்களைப் பாட புத்தக்கங்களில் வைத்திருக்கிறார்கள்" என கர்நாடகாவில் ஆளும் அரசை கண்டித்து காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் D.K.சுரேஷ் பதிவிட்டார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநில கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், "அவரசப்படாதீங்க. அவசரத்துல அர்த்தம் புரியாது. இது கர்நாடக மாநிலத்தின் அதிகாரபூர்வ பாடநூல் கிடையாது. தனியார் பதிப்பகம் வெளியிட்டது" எனவும் "பாராளுமன்ற உறுப்பினர் தவறாக புரிந்துகொள்கிறார்" எனப் பதில் அளித்து இருக்கிறார். இந்தப் படங்கள் இடம்பெற்றிருப்பது கர்நாடக அரசின் பாட புத்தகமே இல்லையென கல்வி அமைச்சர் நாகேஷும் உறுதிப்படுத்துகிறார்.
குஞ்சக்கோ போபனின் இந்தப் பதிவு கர்நாடக மாநிலத்தின் அரசியல் சண்டைக்கு வரை சென்றிருக்கிறது. குஞ்சக்கோ போபன் மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதிவுக்கு சில வேடிக்கையான கமெண்டுகளை அவரின் சக சினிமா துறையைச் சார்ந்தவர்களிடம் இருந்து வந்தவண்ணம் உள்ளது. இயக்குனர் மிதுன் மேனுவல், "அங்க எப்படி போய்ட்டு இருக்கு. வேலை கிடைச்ச பிறகு லீவ் எல்லாம் எடுக்க முடியாது. நான் கதை எழுதி கொண்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது ராஜு நம்பர் அனுப்புங்க" எனப் பதிவிட்டு இருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/kHmI75cVp
0 Comments