உத்தபிரதேச தேர்தல்: `சீட் கேட்டேன், தரவில்லை!’- சுயேச்சையாக களமிறங்கும் மோடியின் லுக்-அலைக்

உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அபினந்தன் என்பவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் பார்ப்பதற்குப் பிரதமர் நரேந்திர மோடியின் சாயலிலே இருப்பார். இதனால் அரசியலில் களத்தில் கவனம் பெற்றவர்.

யோகி - மோடி

அபினந்தன் பேசுகையில், ``லக்னோவில் பாஜக சார்பில் போட்டியிட பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நான் கடிதம் எழுதினேன், ஆனால் அவர்கள் எனது கடிதங்களுக்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் லக்னோவில் உள்ள சரோஜினி நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறகியுள்ளேன்.

நான் ஒரு மோடி பக்தன். 2014 வாரணாசி தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்தேன். அன்றிலிருந்து நான் என் வாழ்க்கையை மோடிக்காக அர்ப்பணித்தேன்.

Also Read: ``வெங்காயம், தக்காளி விலையைக் குறைக்க மோடி பிரதமராகவில்லை!" - மத்திய அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

பிரதமர் மோடியும் யோகி ஆதித்யநாத் ஒரு நாணயத்தின் இரண்டு முகங்கள். பொது மக்களுக்காகத் தன்னலமின்றி உழைக்கும் அவர்களின் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். நான் என் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். நான் அரசியல்வாதியாகி இந்த சமூகத்திற்குச் சேவை செய்ய விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

தனது பொருளாதார பிரச்னைகளைச் சமாளிக்க, ரயிலில் வெள்ளரிக்காய் விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/yn06vgGop

Post a Comment

0 Comments