உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சமஜ்வாடி ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற உத்தரப்பிரதேச தேர்தல் பரப்புரையின் போது பா.ஜ.க தொண்டர்களுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதுமட்டுமின்றி, பா.ஜ.க தொண்டர்களுக்குக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையையும் பிரியங்கா வழங்கினார். அதன் பிறகு ஏ.பி.பி(ABP) செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ``பா.ஜ.க இந்து, முஸ்லிம் அரசியலைச் செய்துவருகிறது. உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. மக்கள் அதைப் புரிந்து கொள்ளவேண்டும்'' என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/pq5EHc6
0 Comments