`வாக்கு வங்கி அரசியலால் முஸ்லிம் பெண்களின் பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன" - மோடி

உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்டிருக்கும் மாநிலமாகத் திகழும் உத்தரப்பிரதேசத்தில், தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் பா.ஜ.க தலைவர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர். கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று 59 தொகுதிகளில் நான்காம் கட்ட வாக்குபதிவு நடந்து வருகிறது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி எனும் இடத்தில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.

மோடி, யோகி ஆதித்யநாத்

அப்போது பேசிய அவர், ``வாக்கு வங்கி அரசியலால் முஸ்லிம் பெண்களின் பிரச்னைகளை எதிர்க்கட்சியினர் புறக்கணிக்கின்றனர். ஆனால், இன்று பா.ஜ.க-வின் வெற்றிக்காக இலவச ரேஷன் பொருள்களைப் பெறும் 15 கோடி மக்கள் பாடுபட்டு வருகிறார்கள்.

மேலும், 28 கோடி இலவச தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பா.ஜ.க-வின் பிரதிநிதிகளாக உருமாறி பா.ஜ.க-வின் வெற்றியை உறுதி செய்கிறார்கள். இந்த கொரோனா தடுப்பூசியால்தான் பள்ளிகள், கல்லூரிகள் இயங்குகின்றன. மேலும், வியாபாரமும் செய்ய முடிகிறது. எனவே, இந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் யோகிதான் மீண்டும் ஆட்சிக்கு வருவார்" என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/Ag64ufK

Post a Comment

0 Comments