உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 10-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாநிலமாக உத்தரப்பிரதேசம் இருப்பதால், எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்பதில் பா.ஜ.க, பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்டக் கட்சிகள் அங்கு தீவிரம் காட்டி வருகின்றன. கொரானா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடனே தேர்தல் பிரசாரங்கள் யாவும் அங்கு நடைபெற்றுவருகின்றன. மேலும் காணொளி வாயிலாக அதிக அளவில் தேர்தல் பிரசாரங்கள் நடக்கின்றன.
இந்த நிலையில், லக்னோவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், ``உத்தரப்பிரதேசத்தை முன்பு ஆண்ட அரசுகள் மாநிலத்தின் நலனில் அக்கறை காட்டவே இல்லை. 1947 முதல் 2017 வரை உத்தரப்பிரதேசத்தில் பொருளாதாரமானது இந்திய அளவில் 6, 7 போன்ற இடங்களில் இருந்தது. 70 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான எந்த வேலைகளும் நடைபெறவில்லை. ஆனால், பா.ஜ.க ஆட்சியில் 6-வது இடத்தில் இருந்த மாநிலத்தின் பொருளாதாரத்தினை 5 ஆண்டுகளில் 2-வது இடத்திற்கு நாங்கள் கொண்டுவந்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் கலவரங்கள், பயங்கரவாதங்கள் இல்லாத முதல் மாநிலம் உத்தரப்பிரதேசம். மேலும், மாநிலத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் கூட்டு ரோந்து பணியில் பெண் போலீஸாரை நியமித்ததும் உத்தரப்பிரதேசம் தான்" என்றார்.
Also Read: ``உத்தரப்பிரதேசம் வளர்ச்சியடையவில்லை என்றால் மொத்த இந்தியாவும் பின்தங்கும்!" - அமித் ஷா
from தேசிய செய்திகள் https://ift.tt/ldqoCpwh6
0 Comments