ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் பரபரப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஐந்து மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் அரசியல் அரங்கில் அனைவராலும் பெரிதும் கவனிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 10-ம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடக்க இருக்கிறது.
இந்த நிலையில், அசாதுதீன் ஒவைசி உத்தரப்பிரதேச மாநிலம் கிதாரி பகுதியில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்றிருந்தார். அப்போது, பிரசார கூட்டம் முடிந்து டில்லி திரும்பும் வழியில், சஜர்சி சுங்கசாவடி அருகே மர்ம நபர்கள் இருவர் அவரது காரை நோக்கி 4 முறை சுட்டதாக கூறப்படுகிறது.
அதனால், தான் வந்த கார் பஞ்சர் ஆனதாகவும் அதன் பிறகு பாதுகாப்பாக மற்றொரு காரில் திரும்பியதாகவும் அசாதுதீன் ஒவைசி தெரிவித்திருக்கிறார்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய குழுவில் மூன்றிலிருந்து நான்கு நபர்கள் வரை இருந்ததாகவும் ஒவைசி குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக தகவலறிந்த உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: ஒவைசி, அரவிந்த் கெஜ்ரிவால் - வட இந்தியத் தேர்தல் முடிவை மாற்றும் சக்தியாக முன்னணியிலிருப்பது யார்?
from தேசிய செய்திகள் https://ift.tt/FrJST1dMy
0 Comments