கடந்த டிசம்பர் மாதம், கர்நாடக மாநிலம் குண்டபுராவில் உள்ள பியூ அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதை எதிர்த்து இந்து, மாணவ மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் காவித்துண்டு போன்ற ஆடைகளை அணிந்து வந்து போராட்டம் நடத்தினர். அதனால், கல்லூரி நிர்வாகம் முஸ்லிம் மாணவிகள், கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று கூறியிருந்தது. இதையடுத்து ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளைத் தொடர்ந்து கல்லூரிக்குள் அனுமதிக்காததால், முஸ்லிம் மாணவிகளும், பல்வேறு அமைப்பினரும் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு எதிராக இந்து மாணவ, மாணவிகளும் அதிகப்படியான இடங்களில் காவித்துண்டு அணிந்து ஹிஜாப் அணிவதற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் மெல்ல மெல்ல தீவிரமடைந்துவரும் நிலையில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாம், ஆனால் அவர்கள் தனி வகுப்பறையில் அமரவைக்கப்படுவர் என்று சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தது.
ஆனாலும், இந்த பிரச்னையானது ஓயவில்லை, மாறாகப் போராட்டங்கள் தான் வலுத்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் பள்ளி ஒன்றில் தேசியக்கொடியேற்றும் கம்பத்தில் இந்து மாணவர்கள் காவிக்கொடியை ஏற்றி பிரச்னை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், ரோட்டில் தனியாக நடந்து செல்லும் முஸ்லிம் மாணவியிடம் தகராறு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், மேலும் பிரச்னைகள் வலுக்காமல் தடுக்கும் விதமாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ``அடுத்த 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணிக்காக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக கல்லூரி மாணவி தொடரப்பட்ட வழக்கு இன்னும் விசாரணைக்கு வராமல் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
I appeal to all the students, teachers and management of schools and colleges as well as people of karnataka to maintain peace and harmony. I have ordered closure of all high schools and colleges for next three days. All concerned are requested to cooperate.
— Basavaraj S Bommai (@BSBommai) February 8, 2022
Also Read: அரசியல் + மதம்; கர்நாடகா ஹிஜாப் சர்ச்சையின் பின்னணி என்ன?
from தேசிய செய்திகள் https://ift.tt/v7IWtiz
0 Comments