மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். உலகத்தையே உலுக்கிய இந்த வெடிகுண்டுத் தாக்குதலை நடத்திய தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறான். அவனுடன் சேர்ந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்த அவனுடைய கூட்டாளிகள் பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் பதுங்கி வாழ்கின்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தாவூத் இப்ராகிமுடன் சேர்ந்து செயல்பட்ட அபு பக்கர் என்பவன் ஐக்கிய அரேபிய எமிரேட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறான். அபு பக்கர் பாகிஸ்தானில் சென்று வெடிகுண்டுகளை எப்படி தயாரிப்பது மற்றும் அதை எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து கற்றுக்கொண்டு வந்தவன். அதோடு மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு தேவையான ஆர்.டி.எஸ் வெடிமருந்துகளை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரவும் முக்கிய காரணமாக இருந்து செயல்பட்டான் என்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் அபு பக்கர் ஐக்கிய அரேபிய எமிரேட்டில் தங்கி இருப்பதை இந்திய உளவுத்துறை சமீபத்தில் தெரிந்து கொண்டு அந்த நாட்டுக்குத் தகவல் கொடுத்தது.
Also Read: மும்பை துணை கமிஷனராக ‘தமிழர்’ ஹரி பாலாஜி - கலக்கத்தில் தாவூத் இப்ராஹிம் கும்பல்!
இதையடுத்து அபு பக்கர் கைது செய்யப்ட்டிருக்கிறான். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டும் இதே நாட்டில் கைது செய்யப்பட்டான். ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அப்போது தப்பிவிட்டான். இந்தியாவில் மிகவும் தேடப்படும் குற்றவாளியாக கருதப்படும் அபு பக்கரை 29 ஆண்டுகளாக சி.பி.ஐ தேடி வந்தது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அபு பக்கரை இந்தியாவுக்கு நாடு கடத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அபு பக்கரின் உண்மையான பெயர் அபு பக்கர் அப்துல் கஃபார் ஷேக் ஆகும். தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான அபு பக்கர், தாவூத்தின் கூட்டாளியான முஸ்தாபா தோஷா என்பவனுடன் சேர்ந்து வளைகுடா நாடுகளில் இருந்து தங்கம், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருட்களை மும்பைக்கு கடத்தி வரும் தொழில் செய்து வந்தான். இந்தியாவில் இருந்து தப்பி சென்ற பிறகு பாகிஸ்தான் மற்றும் துபாயில் மாறிமாறி வசித்து வந்த அபு பக்கர் ஈரான் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு துபாயில் தொழில் செய்து வந்தான். அவனைக் கைது செய்ய 1997-ம் ஆண்டு சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் விடப்பட்டது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப் மேமன் என்பவருக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அபு சலேம் என்பவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Also Read: `25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருக்கக் கூடாது' - தாவூத் இப்ராஹிம் கூட்டாளி கோர்ட்டில் மனு!
from தேசிய செய்திகள் https://ift.tt/eKbhYuR
0 Comments