சென்ற வாரம் `புல்லி பாய்' என்ற ஆப்பில் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் வெளியிட்டு, ஏலம் விடப்படுவதாகத் தெரிவித்தது தொடர்பான குற்றத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் டெல்லி போலீஸாரால் அசாமில் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
`புல்லி பாய்' ஆப் உருவாக்க மூளையாகச் செயல்பட்ட, அசாமில் கைது செய்யப்பட்ட நீரஜ் போபால் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
Also Read: `புல்லி பாய்' ஆப் உருவாக்கியதற்காக நான் வருத்தப்படவில்லை!' - கைதான அசாம் மாணவர் நீரஜ்
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட விஷால் குமார், அசாமில் கைது செய்யப்பட்ட நீரஜ் சொல்லும் உத்தரவுகளை அப்படியே அமல்படுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனது பெயர் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக விஷால் 16 முறை தனது ட்விட்டர் கணக்கை மாற்றியிருக்கிறார். மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்ட விஷால், ஸ்வேதா சிங் மற்றும் மாயக் ராவத் ஆகிய மூன்று பேருக்குமே அசாமில் கைது செய்யப்பட்ட நீரஜ்ஜின் உண்மையான பெயர் தெரியாமல் இருந்துள்ளது. மூன்று பேருக்கும் நீரஜை `ஜியு' என்ற பெயரில்தான் அடையாளம் தெரிந்திருந்தது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் வலதுசாரி கொள்கை உடையவர்கள் என்பதும், இணையதளம் மூலம் மதவிரோத தகவல்களை அடிக்கடி ஷேர் செய்வது, அதுபோன்ற ட்விட்டர் போஸ்ட்களை மறு ட்வீட் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீஸ் காவலில் இருந்த விஷால் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்டு அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Also Read: `Sulli deals' ஆப் மூலம் முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திய விவகாரம்; முக்கிய குற்றவாளி இந்தூரில் கைது!
இதற்கிடையே `புல்லி பாய்' ஆப்பில் புகைப்படம் இடம்பெற்ற மும்பை பெண்ணிற்கு மர்ம நபர்கள் போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 34 வயதாகும் அப்பெண் மும்பை அந்தேரியில் வசிக்கிறார். அவர் தனது புகைப்படம் `புல்லி பாய்' ஆப்பில் இடம் பெற்றவுடன் அந்த ஆப் குறித்து போலீஸில் புகார் செய்தார். தற்போது மர்ம நபர்கள் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அப்பெண் மும்பை சைபர் பிரிவு போலீஸில் இது தொடர்பாக புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/3thXjzg
0 Comments