உத்தரப்பிரதேசம்: பாஜக-வில் இணைந்த காங்கிரஸ் `பிரசார நாயகி’... யார் இந்த பிரியங்கா மவுரியா?!

உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ஒரு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட `நான் ஒரு பெண்... என்னால் போராட முடியும்' என்ற வாசகத்துடன் உத்தரப்பிரதேசம் முழுவதும் பிரபலமானவர் பிரியங்கா மவுரியா. இதன் மூலமாக பல பெண்களை ஈர்த்தவர்.

பிரியங்கா மவுரியா

தற்போது உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கடந்த 15-ம் தேதி முதல் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் 40 சதவீகிதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்தது.

உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரியங்கா மரியாவுக்கு காங்கிரஸ் சார்பில் சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியுடன் இருந்த பிரியங்கா, லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று பாஜகவில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, ``நான் களத்தில் அதிகம் பணியாற்றியுள்ளேன். எனக்கு சீட் வழங்குவது குறித்து முன்பே திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறினர். ஏதோ சதி நடந்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

கோவாவில் ஆட்சியைப் பிடிக்கிறது பிஜேபி கூட்டணி!

சமீபத்தில் முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் டெல்லியில் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் பா.ஜ.க-வில் இணைந்துள்ளது குறிப்பிடதக்கது.

Also Read: ராஜேந்திர பாலாஜிக்கு எடப்பாடி கொடுத்த மெசேஜ்; திமுக-வை சீண்டும் பாஜக?! | Elangovan Explains



from தேசிய செய்திகள் https://ift.tt/33xI4HT

Post a Comment

0 Comments