`` பாம்பு என்னை மூன்று முறை கடித்த போதும்... " - சல்மான் கான் விளக்கம்!

நடிகர் சல்மான்கானுக்கு இன்று ( டிசம்பர் 27) 56-வது பிறந்தநாளாகும். பிறந்தநாளை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக மும்பை அருகில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். 26-ம் தேதி அதிகாலையில் சல்மான் கானை பாம்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 6 மணி நேரம் சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பண்ணை வீட்டில் சல்மான்கான்

சல்மான்கானின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் சல்மான்கானின் பண்ணை வீட்டிற்கு வெளியில் காத்திருந்தனர். நள்ளிரவில் சல்மான்கான் தனது வீட்டிற்கு வெளியில் காத்திருந்த பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது பத்திரிகையாளர்கள் ``பாம்பு எப்படி கடித்தது?" என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த சல்மான் கான், அதிகாலையில் வீட்டிற்குள் பாம்பு ஒன்று வந்துவிட்டது. உடனே பாம்பை ஒரு கம்பில் எடுத்து வெளியில் கொண்டு வந்தேன். அப்படி வரும்போது பாம்பு படிப்படியாக நகர்ந்து எனது கை வரை வந்துவிட்டது. அதனை வீட்டிற்கு வெளியில் விடுவதற்காக கையில் பிடித்த போது மூன்று முறை கடித்துவிட்டது. அது ஒரு வகையான விஷப்பாம்பு ஆகும். எனவே உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அங்கு 6 மணி நேரம் சிகிச்சையளிக்கப்பட்டது. இப்போது நலமாக இருக்கிறேன். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த போதும் பாம்பு அங்கேயே இருந்தது. உடனே அந்த பாம்பை பிடித்து சென்று காட்டுக்குள் விட்டோம் என்று தெரிவித்தார். ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சல்மான்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.



from தேசிய செய்திகள்

Post a Comment

0 Comments