
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 14 நாட்கள் தனிமைக்கு பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றதாக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய அவருக்கு கடந்த மாதம் 22-ம் தேதி கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு, அவர் கடந்த 4-ம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய உடனே, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments