
பிரபல ஜவுளிக்கடை நிறுவனங்கள் ரூ.1,000 கோடிக்கு விற்பனையை குறைத்து காட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து ரூ.10 கோடி ரொக்கம், ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கிளைகளைக் கொண்ட 2 பிரபல ஜவுளிக்கடை நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த 1-ம் தேதி முதல் 5 நாட்கள் அந்நிறுவனங்களுக்கு சொந்தமான நகைக்கடை, ஜவுளிக்கடை மற்றும்வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் வருமானவரித் துறை புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments