மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது: குழுக்களாக பிரிந்து பல்வேறு மாவட்டங்களிலும் பார்வையிட திட்டம்

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் நாளை சென்னை வருகின்றனர்.

தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments