சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லை; இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தஇளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் கங்காணிப்பட்டி அருகேயுள்ள மரவாமதுரையைச் சேர்ந்தவர் சின்னாண்டி மகன் ராஜ்குமார்(34). இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர், கருவுற்ற சிறுமியை கருக்கலைப்பு செய்யுமாறு மிரட்டியுள்ளார். இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் 

Post a Comment

0 Comments