
மதுரை கே.கே.நகர் 80 அடி சாலையில் பழமையான நிழல் தரும் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு வருவதால் விரைவில் இந்த சாலை பசுமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் சமீபகாலமாக சாலையோரங்களில் உள்ள பசுமையான மரங்களை வெட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. ஒருபுறம் மின்வாரியத்தினர் பராமரிப்பு பணி என்ற பெயரில் மின் கம்பிகளுக்கு இடையூறில்லாத கிளைகளையும் வெட்டுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டுகின்றனர். மற்றொரு புறம் தனி நபர்களும், வர்த்தக நிறுவனங்களும் தங்கள் கட்டிடங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி மரங்களை வெட்டி விடுகின்றனர். மரம் வளர்ப்பு பற்றி பொதுமக்களிடையே பெரியளவில் விழிப்புணர்வு ஏற்பட்டும் மரங்களை பாதுகாக்க முடியவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments