சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபரை கடத்திய வழக்கில் உதவி ஆணையர், ஆய்வாளர் உட்பட 6 போலீஸார் பணியிடை நீக்கம்

சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபரை கடத்தி, சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் சிக்கிய காவல்துறை அதிகாரிகள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ். இவரை பண்ணை வீட்டில் கட்டிப்போட்டு அவருடைய சொத்துகளை திருமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் எதிர் தரப்பினருக்காக எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments