
‘தி இந்து’ குழுமம், நவராத்திரி பண்டிகையை தனது வாசகர்களோடு இணைந்து கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் கொலு போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான ‘கொலு கொண்டாட்டம் - 2021’ போட்டியில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி,மதுரை மாநகரப் பகுதிகளைச்சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளலாம். இதில் பங்கேற்பவர்கள் தங்களதுஉருவமும் தெரிவதுபோல கொலுவைபுகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும்.புகைப்படத்தின் அளவு 3MB-க்கு மிகாமல்இருக்க வேண்டும். அந்த புகைப்படங்களில் மங்கள்தீப் அகர்பத்தியின் பாக்கெட்டும் இடம்பெறுவதன்மூலம் உங்கள் வெற்றிக்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
அழகியல் உணர்வோடு நீங்கள் வைத்துள்ள கொலுவுடன், சுவையான சுண்டலும் தயாராக உள்ளது. கிளிக் செய்து கொலுவை புகைப்படம் எடுங்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தோ, நேரடியாகவோ https://bit.ly/KOLU21 என்ற இணையதளத்துக்கு சென்று புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள். இதற்கான அவகாசம் இன்று (அக்டோபர் 10) நிறைவடைகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ammBS7
0 Comments