``4 முறைக்கு மேல் ATMஇல் பணம் எடுத்தால் GST வசூலிக்கப்படும்" - SBI வங்கி அறிவிப்பு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி கிளைகள் மூலம் தொடங்கப்பட்ட அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்குகளுக்கான பணம் எடுத்தல் (Cash Withdrawal) கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது.

இந்தப் புதிய கட்டண மாற்றம் வரும் 2026, அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக SBI வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``BSBD கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்திற்கு வழக்கம்போல 4 முறை எஸ்.பி.ஐ-இல் இலவசமாகப் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

SBI வங்கி
SBI வங்கி

மாதத்திற்கு 4 முறைக்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பணம் எடுத்தல் பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி (GST) கட்டணம் வசூலிக்கப்படும். அதேவேளையில், கூகுள் பே, போன்பே, யுபிஐ (UPI) மற்றும் நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வகையான டிஜிட்டல் வழி பரிவர்த்தனைகளும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து முற்றிலும் இலவசமாகவே இருக்கும்.

எனவே, வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.



from India News https://ift.tt/kdTYmFq

Post a Comment

0 Comments