அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கான அரையிறுதி ஆட்டமான ஐந்து மாநில தேர்தலின் வாக்குப் பதிவுகள் முடிவடைந்திருக்கின்றன. லோக் சபா தேர்தலுக்காகக் காங்கிரஸ் உட்பட 28 கட்சிகள் ஒருங்கிணைந்து `இந்தியா' எந்த பெயரில் கூட்டணியை உருவாக்கியிருந்தாலும், இந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தனித்தே களமிறங்கியிருக்கிறது. தற்போது, வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸுக்கு சற்று சாதகமான முடிவுகள் வெளியாகியிருப்பதால், காங்கிரஸும் டிசம்பர் 3-ல் நல்ல முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 50 சதவிகித பெண் முதல்வர்களை உருவாக்குவதே காங்கிரஸின் இலக்கு என்று அந்தக் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். கேரளாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, எர்ணாகுளத்தில் கேரள மகிளா காங்கிரஸின் மாநாடான ‘உத்சா-வைத்' மாநாட்டை தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, ``ஆண்களை விடப் பெண்கள் தொலைநோக்கு பார்வை, அதிக பொறுமை, கருணை உள்ளம் கொண்டவர்கள். இருப்பினும், நம்மிடம் இன்று ஒரு பெண் முதல்வர்கூட இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருக்கும் பல பெண்களுக்கு, முதல்வராவதற்கான நல்ல குணங்கள் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். கட்சியின் ஒவ்வொரு மட்டத்திலும் அதிகமான பெண்கள் பங்கேற்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வுக்கும், காங்கிரஸுக்கும் இடையேயான மையப் போராட்டம். வரலாறு நெடுகிலும், ஆர்.எஸ்.எஸ் பெண்களை அவர்களுக்கான உரிமைகளுக்குள் அனுமதிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் முற்றிலுமாக ஆண் மைய அமைப்பு.
பெண்கள் தங்களுக்கானதைத் தாங்களே தேர்வு செய்யவேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். வலதுசாரி தலைவர்களும், மூத்த தலைவர்களும், ஒரு பெண் ஒழுங்காக உடையணிந்திருந்தால் அவள் பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளாகியிருக்க மாட்டாள் என்று கூறுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இது நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் அவமதிக்கும் செயலாகும். இவ்வாறு கூறுவது, பாதிக்கப்பட்டவரை வில்லனாக மாற்றுகிறது. இதுதான், ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். எனவே, அடுத்த 10 ஆண்டுகளில் 50 சதவிகித பெண் முதல்வர்களை உருவாக்குவதே காங்கிரஸின் இலக்கு" என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/q7dBHjk
0 Comments