ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து! - முதல்வர் விஜய்

``எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்." - முதல்வர் விஜய்
மேகதாது அணை: சட்டமன்றத்தில் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று இடதுசாரி தலைவர் நல்லகண்ணு, திரை பிரபலங்கள் பாரதிராஜா, ஆர்.பி. சௌத்ரி ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை, பேரவை துணைத் தலைவர் முன்மொழியவுள்ளார். இது தவிர, கர்நாடக மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டுவரவுள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த அணை திட்டத்துக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், அரசின் தனித் தீர்மானத்தை முதல்வர் முன்மொழியவுள்ளார். இது தொடர்பாக பேரவையில் விவாதம் நடத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from India News https://ift.tt/koOLvHS
0 Comments