சவால் விட்ட ஆர்.எஸ். பாரதி!
உள்ளாட்சித் தேர்தலில் 25-ல் 1 மேயர் இடத்தையாவது வென்று காட்டுங்கள் எனப் திமுக-வுக்கு சவால் விட்டிருந்தார் ஆதவ் அர்ஜூனா. இதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "முடிந்தால் ஆறு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள். ஒரு மேயர் பதவியையாவது தவெக வென்றால், நான் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்." என பதில் கொடுத்திருக்கிறார்.
மீண்டும் உயர்ந்தது LPG சிலிண்டர் விலை!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு, அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஏற்கெனவே கடந்த மார்ச் 7-ம் தேதி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் 60 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. சிலிண்டர் ஒன்றுக்கு 29 ரூபாய் இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஜூன் 7 முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை 928.50 ரூபாயிலிருந்து 957.50 ரூபாயாக உயர்கிறது.

from India News https://ift.tt/RuGOCX0
0 Comments