தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
இதுவரை ஐந்து முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருக்கும் அன்பரசன், அதில் நான்கு முறை ஆலாந்தூர் தொகுதியில்தான் போட்டியிட்டிருக்கிறார்.
முன்பு மூன்று முறை இவருக்கு தொகுதியின் வெற்றியை அள்ளி தந்த ஆலந்தூர் மக்கள், இந்த முறை கைக்கொடுக்கவில்லை.
த.மோ அன்பரசனிற்கு இருந்த ப்ளஸ்கள்...
> ஆலந்தூரில் திமுகவின் கட்டமைப்பு மிக வலுவாக உள்ளது. இதற்கு அன்பரசனும் மிக முக்கிய காரணம்.

> திமுக உடன், இந்தத் தொகுதியில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவு உண்டு.
> எம்.எல்.ஏவாக அன்பரசனின் செயல்பாடுகள் மற்றும் பணிக்கு நன்றாகவே இருந்தது.
ஆனால், இதையெல்லாம் தாண்டி தவெக வேட்பாளர் ஹரிஷ், அன்பரசனைப் பின்னுக்குத் தள்ளி, ஆலந்தூர் மக்களின் வாக்குகளை அறுவடை செய்துள்ளார்.
த.மோ அன்பரசன் 29,609 வாக்குகள் வித்தியாசத்தில் ஹரிஷிடம் வெற்றியை நழுவவிட்டுள்ளார்.
த.மோ அன்பரசன் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 82,956.
from India News https://ift.tt/ulWQz2m
0 Comments