டெல்லி செல்லும் முதல்வர் விஜய்; பிரதமரிடன் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்னென்ன? | News Today Live Update

மேகதாது விவகாரம்!

மாணிக்கம் தாக்கூர் எம்.பி
மாணிக்கம் தாக்கூர் எம்.பி

மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன்? பிரதமர் மோடியிடம் ஏன் நேரடியாக கேள்வி எழுப்பவில்லை என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் விமர்சித்திருக்கிறார்.

பசுவதை: அவசரமாக விசாரிக்க முடியாது

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பசுவதைக்கு எதிரான சட்டங்களை நாடு முழுவதும் உறுதியாக அமல்படுத்தக் கோரி, அகில பாரத இந்து மகாசபாவின் முன்னாள் துணைத்தலைவர் சதீஷ்குமார் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

வரும் 28-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால், இந்த மனுவை மே 27-ம் தேதியே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் வருண்குமார் சின்ஹா, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்விடம் நேற்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால், இதில் 'எந்த அவசரமும் இல்லை' என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரிய கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.

பிரதமரைச் சந்திக்கும் முதல்வர் விஜய்!

விமான நிலையத்தில் விஜய்
விமான நிலையத்தில் விஜய்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் செய்கிறார். இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். விஜய்யின் டெல்லி பயண ஏற்பாடுகளை உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், கவனித்து வருகின்றனர்.

மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை, முதலமைச்சர் விஜய் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், மோடியுடன் நடைபெற இருக்கும் இந்த முதல் சந்திப்பின் போது, பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, வளர்ச்சித் திட்டங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒப்புதல்கள், மேகதாது அணை விவகாரம் மற்றும் 'பி.எம்.ஸ்ரீ' திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் தேவைகள் குறித்த விரிவான மனுவை முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



from India News https://ift.tt/EZ4kjgf

Post a Comment

0 Comments