விகடன் கருத்துக்கணிப்பு: வாசகர்களாகிய உங்களிடம் இதனைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்!

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கான பணிகளை அக்கட்சி முன்னெடுத்துள்ளது.

கடந்த 60 ஆண்டுகளாக திமுக — அதிமுக என்றே தமிழக அரசியல் களம் சுழற்சி முறையில் பயணித்து வந்துள்ளது. தற்போது விஜய்யும் அவரின் தலைமையிலான தவெகவும் ஒரு புதிய மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

விஜய்

இந்த தேர்தலுக்காக விகடன் களத்தில் நேரடியாக மக்களைச் சந்தித்துக் கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டது. எனினும், அப்போது மக்கள் மத்தியில் எழுந்திருந்த விஜய்க்கான பெரும் ஆதரவு அலையை நம்மால் கணிக்க இயலவில்லை .பெரும்பாலான ஊடகங்களாலும் கருத்துக்கணிப்பு நிறுவனங்களாலும் தமிழகத்தில் தேர்தல் முடிவுகளைக் கணிக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பான Pradeep Gupta-வின் Axis My India தவிர வேறு யாரும் மக்கள் முடிவை சரியாகக் கணிக்கவில்லை. Axis My India குழுவுக்கு எங்களுடைய வாழ்த்துகள்.!

இப்பணியில் நாங்கள் எங்கே இடறினோம் என்பதை ஆராய்ந்து வருகிறோம். தொடர்ந்து எங்களுடன் இணைந்து பயணித்து வரும் வாசகர்களாகிய உங்களிடம் இதனைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.



from India News https://ift.tt/8dW6iFq

Post a Comment

0 Comments