"தமிழ்குமரன் திமுகவில் சீட் பெறத்தான் ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு செய்திருந்தார்...." என்று ஜி.கே.மணியையும், தமிழ்குமரனையும் கடுமையாக விமர்சித்து பேசினார் அன்புமணி ராமதாஸ்.
தருமபுரியில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் பேசும்போது, "பாமக-வில் மூத்த தலைவராக இருந்த ஜி.கே.மணி, தன் சுயநலத்துக்காகவும், தன் மகன் தமிழ்குமரனின் நலனுக்காகவும் என்னையும் என் தந்தை டாக்டர் ராமதாஸையும் திட்டமிட்டு பிரித்தார்.
அதனால் எவ்வளவோ அவமானங்களை நான் தாங்கிக் கொண்டேன். அனைத்துக்கும் ஜி.கே.மணிதான் காரணம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கைக்கூலி ஜி.கே.மணி., உதயநிதியின் கைக்கூலி தமிழ்க்குமரன். உதயநிதிக்கு இப்போது எல்லாவகையிலும் நெருக்கமாக இருப்பது தமிழ்குமரன்தான்.
அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 10.5 சதவிகித வன்னியருக்கான இட ஒதுக்கீட்டை மு.க.ஸ்டாலினும், ஜி.கே.மணியும் சேர்ந்தே கெடுத்தனர்.
தமிழ்குமரன் திமுகவில் சீட் பெறத்தான் ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு செய்திருந்தார். அப்படி சீட் பெற்றால் ராமதாஸ் குடும்பத்துக்கு துரோகம் செய்தது இவர்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்பதால் காங்கிரஸில் தமிழ்குமரனை சேர்க்க வைத்து பெரிய தொகையை கொடுத்து பென்னாகரத்தை பெற்றுள்ளனர். ஜி.கே.மணியும் அவரது மகன் தமிழ்குமரனும் துரோகங்களை சாதாரணமாக செய்கின்றனர், இதெல்லாம் டாக்டர் ராமதாஸுக்கு தெரியாமல் மறைத்து விடுகின்றனர்" என்றார்.
from India News https://ift.tt/8gZiwJX
0 Comments