தைப் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள் உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு கோலாகலமாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,``பொங்கல் திருநாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மக்களை ஒன்றிணைத்து, நம் சமூகத்தில் அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகையைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது.
வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் மரியாதையையும் நினைவூட்டும் இந்தத் திருநாள், நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது.இந்தப் பொங்கல், உங்கள் இலக்குகளை நிறைவேற்ற புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், நலமும் கிடைக்க வேண்டும் என மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின்,
புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் #தமிழர்_திருநாள்-இல், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 15, 2026
தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், #DravidianModel 2.0-வில்… pic.twitter.com/SguwduVKr5
பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி #பொங்கல்2026 @AIADMKOfficial pic.twitter.com/GAhyb03y2M
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) January 15, 2026
உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய #பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
— Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) January 15, 2026
சாதி, மதம் கடந்து உழைப்பை - உழவர்களை - இயற்கையைக் கொண்டாடும் #தைப்பொங்கல் நாளின் மகிழ்ச்சி மென்மேலும் பெருகட்டும்.
தமிழ்நாட்டை சூழ வரும் ஆதிக்க மேகங்கள் உதயசூரியனின் ஒளியால்…
தமிழர் பண்பாட்டின் சிகரமெனக் கொண்டாடப்படும் திருநாள் பொங்கல். இயற்கைக்கும் உழவுக்கும் நன்றி பாராட்டும் இந்நன்னாளில் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்; இதயங்கள் இனிமையால் நிறையட்டும். தமிழ் மண்ணின் செழுமையும், தமிழரின் பெருமையும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 15, 2026
தமிழ்ச் சொந்தங்கள்…
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.
— TVK Vijay (@TVKVijayHQ) January 15, 2026
அனைவருக்கும்
வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
எம் மக்களுக்கு இழைக்கப்படும்
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) January 15, 2026
அநீதிகளுக்கு எதிரான நெருப்பெரிந்து, தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்!
தமிழ்மொழி மீட்க,
தமிழர் நலன் காக்க,
தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட,
தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட,
தமிழர்தம் கலை, இலக்கியப் பண்பாடு, வரலாறு… pic.twitter.com/pmu6O1xVD6
from India News https://ift.tt/9svr3zZ
0 Comments