Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை' காரணமா?

இனி உற்பத்தியாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் 'சஞ்சார் சாத்தி' ஆப்பை ப்ரீ-இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் - இது சமீபத்தில் வெளியான மத்திய அரசின் உத்தரவு.

ஏற்கெனவே உற்பத்தியான... விற்கப்பட்ட மொபைல் போன்களில் கூட, இந்த ஆப்பை சாப்ட்வேர் அப்டேட் மூலம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

எதிர்ப்பு

சஞ்சார் சாத்தி என்பது மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு ஆப் ஆகும்.

இந்தக் கட்டாய உத்தரவிற்கு, 'தனிநபர் உரிமை மீறல்' என்று எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

சஞ்சார் சாத்தி|Sanchar Saathi
சஞ்சார் சாத்தி|Sanchar Saathi

உத்தரவை திரும்ப பெற்ற மத்திய அரசு

இதனையடுத்து, தற்போது மத்திய அரசு தங்களது உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.

இது குறித்த அறிக்கையில், "இந்திய குடிமக்களுக்கு சைபர் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் சஞ்சார் சாத்தி ஆப்பை அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் ப்ரீ-இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கட்டாய உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்த ஆப் பாதுகாப்பானது மற்றும் இது சைபர் உலகில் மோசடி பேர்வழிகளிடம் இருந்து குடிமக்களை பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட உத்தரவு ஆகும்.

பயனாளர்களை சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாப்பதை தவிர, இந்த ஆப்பில் வேறு ஒன்றும் இல்லை.

'இந்த ஆப் வேண்டாம்' என்கிற போது, மக்களே இந்த ஆப்பை டெலீட் செய்துகொள்ளலாம். இதை அரசாங்கம் தெளிவாக தெரிவித்துவிட்டது.

ஸ்மார்ட் போன்
ஸ்மார்ட் போன்

மக்களுக்கு நம்பிக்கை

இதுவரை இந்த ஆப்பை 1.4 கோடி பயனாளர்கள் டௌன்லோடு செய்திருக்கிறார்கள்.

இந்த ஆப்பை மக்கள் இன்ஸ்டால் செய்வது அதிகமாக இருந்தது. இந்த நடைமுறையை இன்னமும் வேகமாக்க தான் மத்திய அரசு இந்த உத்தரவை கொண்டு வந்தது. மேலும், இந்த ஆப் குறித்து தெரியாத மக்களுக்கும் அதை தெரியப்படுத்துவதும் உத்தரவின் நோக்கமாகும்.

கடந்த ஒரு நாளில், 6 லட்சம் மக்கள் இந்த ஆப்பை டௌன்லோடு செய்திருக்கின்றனர். இது 10X அதிகமாகும்.

இது மக்களுக்கு அந்த ஆப்பின் மீது இருக்கும் நம்பிக்கையை உறுதி செய்கிறது.

சஞ்சார் சாத்தி ஆப் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை முன்னிட்டு, ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ப்ரீ இன்ஸ்டால் உத்தரவு கைவிடப்படுகிறது" என்று கூறப்பட்டிருக்கிறது.



from India News https://ift.tt/bdVWCgR

Post a Comment

0 Comments