கிரெடிட் ஸ்கோர் முதல் வருமான வரி ஃபைலிங் வரை - இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள் என்னென்ன?

இன்று - 2026-ம் ஆண்டின் முதல் நாளில் இருந்து சில நடைமுறைகள் மாறுகின்றன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

1. பான் - ஆதார் இணைப்பு

நேற்று பான் - ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி.

இன்னமும், இந்த இரண்டையும் இணைக்கவில்லை என்றால், பான் கார்டு செல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் கார்டு செல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

இதனால், வங்கி பரிவர்த்தனை தொடங்கி வருமான வரிக் கணக்குத் தாக்கல், வருமான வரி ரீஃபண்ட் அனைத்திலும் சிக்கல் ஏற்படலாம்.

ஆதார் - பான் கார்டு இணைப்பு
ஆதார் - பான் கார்டு இணைப்பு

2. 8வது ஊதியக் குழு

இன்றிலிருந்து 8வது ஊதியக் குழு அமலுக்கு வருகிறது. இதனால் மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் பென்சன்தாரர்களுக்கு சம்பளம், பென்சன் தொகை மாறும்.

3. கிரெடிட் ஸ்கோர்

இதுவரை கிரெடிட் ஸ்கோர்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்யப்பட்டு வந்தன. ஆனால், இனி ஒவ்வொரு வாரமும் அப்டேட் செய்யப்பட உள்ளது.

இதனால், இ.எம்.ஐ-யை மிஸ் செய்தாலோ, கடன் திரும்ப கட்டாவிட்டாலோ, உங்களது கிரெடிட் ஸ்கோரில் சீக்கிரம் பிரதிபலிக்கும்.

4. கேஸ் சிலிண்டர்

இன்று முதல் வீட்டுப் பயன்பாடு மற்றும் கமர்ஷியல் பயன்பாடு LPG சிலிண்டர்களின் விலை மாற உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.

5. புதிய வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவம்

இந்த மாதம் முதல் புதிய வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்த வருமான வரி படிவத்தில் ஏற்கெனவே வங்கி பரிவர்த்தனைகள், செலவுகள் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். அதனால், அதை நிரப்புவது மிகவும் எளிதாகும்.



from India News https://ift.tt/8dISo6v

Post a Comment

0 Comments