குடியுரிமைக்காக அமெரிக்கா சென்று குழந்தை பெற்றுக்கொள்ள பிளானா?- இனி 'நோ' விசா!

எந்த நாட்டினராக இருந்தாலும், அவர்களுக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை அமெரிக்க குடிமகனாகக் கருதப்படும் - இது அமெரிக்காவின் சட்டம்.

அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை

இதற்கு தற்போது செக் வைத்துள்ளது அமெரிக்க தூதரகம். நேற்று இந்திய அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

"அமெரிக்க குடியுரிமைக்காக அமெரிக்கா சென்று குழந்தை பெற்றுக்கொள்ளப் பயணம் மேற்கொள்வது தெரிந்தால், அவர்களின் விசா ரத்து செய்யப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதன் படி, இனி அமெரிக்க குடியுரிமைக்காக அங்கே சென்று குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பது நடக்காது.

அமெரிக்க தூதரக அதிகாரிக்கு பயணத்தில் இந்த மாதிரியான ஏதேனும் சந்தேகம் எழுந்தால் கூட, விசா ரத்து செய்யப்படலாம்.

அமெரிக்கா
அமெரிக்கா

இப்படியெல்லாமா செய்வார்கள்?

'அமெரிக்க குடியுரிமைக்காக அங்கே சென்று குழந்தை பெற்றுக்கொள்வார்களா?' இந்த சந்தேகம் எழுவது நியாயம் தான். தரவுகளின் படி, ஒவ்வொரு ஆண்டும் 33,000 குழந்தைகள் இந்த மாதிரியான பயணங்கள் மூலம் பிறக்கிறார்கள். இந்தப் பயணத்தைப் 'பிறப்பு சுற்றுலா (Birth Tourism)' என்று கூறுகிறார்கள்.



from India News https://ift.tt/LWb7Csg

Post a Comment

0 Comments