``இந்தியா - ரஷ்யா உறவு 'துருவ நட்சத்திரத்தை' போன்றது'' - மோடி பெருமிதம்

இந்திய பயணம்‌‌ முடிந்து ரஷ்ய அதிபர்‌ புதின் ரஷ்யாவிற்கு சென்றுவிட்டார்.

மோடி பேச்சு

இந்தியா - ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஐதராபாத் இல்லத்தில் நேற்று இந்திய பிரதமர்‌ மோடி பேசியதாவது,

"கடந்த எட்டு தசாப்தங்களில், உலகம் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. மனிதநேயம் பல சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்துள்ளது.

ஆனால், எப்போதும் இந்தியா - ரஷ்யா உறவு என்பது துருவ நட்சத்திரம் போல, நிலையோடு இருந்துள்ளது.

எரிசக்தி பாதுகாப்பு என்பது இந்தியா - ரஷ்யா கூட்டாண்மையின் பலமான மற்றும் முக்கிய தூணாகும்.

ரஷ்யா - உக்ரைன் போரின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே, இந்தியா தொடர்ந்து அமைதியை வலியுறுத்தி வருகிறது" என்று கூறியிருந்தார்.

மோடி - புதின்
மோடி - புதின்

விக்ரம் மிஸ்ரி என்ன சொல்கிறார்?

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "இந்தியா - ரஷ்யா உறவு என்பது நிலையானது.

நீண்ட காலத்தில் பல பிரச்னைகள் நடந்துள்ளன. ஆனால், எதுவும் இந்தியா - ரஷ்யா உறவின் அடிப்படையை பாதிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 27 மணிநேரம் நீண்ட இந்திய பயணத்தில் எரிசக்தி பாதுகாப்பு, இன்ஜினீயரிங், ஐ.டி, தொழிலாளர்கள் மாற்றம் என பல துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.



from India News https://ift.tt/RHqbD7o

Post a Comment

0 Comments