`நிதிஷின் 20 வருட முக்கிய இலாகாவும் போனது’ - அதிகாரத்தில் மேலோங்கும் பாஜக! | பீகார் அமைச்சரவை

பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

நவம்பர் 20-ல் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 10-வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றார். அவருடன் 26 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

அவர்களில், பாஜக-வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்கள்.

மொத்தமாகக் கட்சி வாரியாக, பா.ஜ.க-வில் 14 பேருக்கும், ஜே.டி.யு-வில் 8 பேருக்கும், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியில் 2 பேருக்கும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய இரு கட்சிகளில் தலா ஒருவருக்கும் அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முதல்வர் உட்பட அமைச்சர்கள் 26 பேருக்கும் யாருக்கு என்ன இலாகா ஒதுக்கப்பட்டிருந்தது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதில், 2005-ம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் வசமிருந்த உள்துறை இலாகா பாஜக-வைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி வசம் சென்றிருக்கிறது.

ஏற்கெனவே ஜே.டி.யு-வை விட பா.ஜ.க-வுக்கு அதிக அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது உள்துறை இலாகாவும் பா.ஜ.க-விடம் சென்றிருப்பதால் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் பா.ஜ.க-வின் கரங்கள் மேலிருப்பதாகப் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது.

இனி யாருக்கு என்ன இலாகா ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற பட்டியலைப் பார்ப்போம்...

நிதிஷ் குமார் - பீகார் அமைச்சரவை
நிதிஷ் குமார் - Bihar Cabinet

பாஜக அமைச்சர்கள்:

1. சாம்ராட் சவுத்ரி (துணை முதல்வர்) - உள்துறை

2. விஜய் குமார் சின்ஹா ​​(துணை முதல்வர்) - நிலம் & வருவாய், சுரங்கம் & புவியியல்

3. திலீப் ஜெய்ஸ்வால் - தொழிற்துறை

4. மங்கள் பாண்டே - சுகாதாரம், சட்டம்

5. ராம் கிருபால் யாதவ் - விவசாயம்

6. சஞ்சய் சிங் டைகர் - தொழிலாளர் வளங்கள்

7. நிதின் நபின் - சாலை கட்டுமானம்; நகர்ப்புற மேம்பாடு & வீட்டுவசதி

8. அருண் சங்கர் பிரசாத் - சுற்றுலா, கலை & கலாச்சாரம்

9. சுரேந்திர மேத்தா - விலங்கு மற்றும் மீன்வள வளங்கள்

பீகார் உள்துறை அமைச்சர் சாம்ராட் சவுத்ரி (துணை முதல்வர்) - முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் உள்துறை அமைச்சர் சாம்ராட் சவுத்ரி (துணை முதல்வர்) - முதல்வர் நிதிஷ் குமார்

10. நாராயண் பிரசாத் - பேரிடர் மேலாண்மை

11. ராமா நிஷாத் - பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன்

12. லக்கேந்திர ரோஷன் - பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் நலன்

13. ஷ்ரேயாஷி சிங் - தகவல் தொழில்நுட்பம்; விளையாட்டு

14. பிரமோத் குமார் - கூட்டுறவு; சுற்றுச்சூழல், காடு & காலநிலை மாற்றம்

ஐக்கிய ஜனதா தள அமைச்சர்கள்:

15. விஜய் குமார் சவுத்ரி - நீர்வளம், கட்டிட கட்டுமானம்

16. விஜேந்திர குமார் யாதவ் - எரிசக்தி

17. ஷ்ரவன் குமார் - கிராமப்புற மேம்பாடு, போக்குவரத்துத் துறை

18. அசோக் சவுத்ரி - கிராமப்புற பணிகள்

19. எம்.டி. ஜமா கான் - சிறுபான்மையினர் நலன்

20. லெஷி சிங் - உணவு & நுகர்வோர் விவகாரங்கள்

21. மதன் சாஹ்னி - சமூக நலன்

22. சுனில் குமார் - கல்வி

மோடி - நிதிஷ் குமார்
மோடி - நிதிஷ் குமார்

லோக் ஜனசக்தி கட்சி அமைச்சர்கள்:

23. சஞ்சய் குமார் - கரும்பு தொழில்கள்

24. சஞ்சய் குமார் சிங் - பொது சுகாதாரப் பொறியியல்

ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா அமைச்சர்:

25. தீபக் பிரகாஷ் - பஞ்சாயத்து ராஜ்

ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா:

26. சந்தோஷ் குமார் சுமன் - சிறு நீர்வளங்கள்

முதல்வர் நிதிஷ் குமாருக்கு பொது நிர்வாகம், அமைச்சரவை செயலகம், கண்காணிப்பு ஆகிய இலாகாக்களுடன் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் அனைத்தும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.



from India News https://ift.tt/Of1YuJj

Post a Comment

0 Comments