`இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா?' - ட்ரம்ப் சொல்லும் புது தகவல்!

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால் இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரி என மொத்தம் 50 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா.

இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கும் பணத்தை, அது உக்ரைன் போருக்கு செலவிடுகிறது என்று தொடர்ந்து சாடி வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப், "இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது எனக்கு பிடிக்கவில்லை. இன்று இந்திய பிரதமர் மோடி தாங்கள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக கூறியுள்ளார்.

இது மிகப்பெரிய விஷயம். இப்போது நாம் இதை சீனாவிற்கும் செய்ய உள்ளோம்.

இந்தியாவினால் உடனே இந்த இறக்குமதியை நிறுத்திவிட முடியாது. ஆனால், அது விரைவில் இந்த இறக்குமதியை நிறுத்தும்" என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாடு

இதுவரை இந்தியா, 'தேசத்திற்கு நல்லது எதுவோ, அதைத் தான் இந்தியா செய்யும். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கும்' என்று தான் கூறி வந்தது.

தற்போது ட்ரம்ப் கூறியுள்ளது புதிய தகவலாக இருக்கிறது. ஆனால், இந்த விஷயம் குறித்து இந்தியா இன்னும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.



from India News https://ift.tt/nWTiFZC

Post a Comment

0 Comments