மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க.முத்து.
பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். 77 வயதான அவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்திருக்கிறார். அவரது உடல், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மு.க.முத்து உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
from India News https://ift.tt/SL4maZk
0 Comments