Yoga Day: "யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை" - பிரதமர் மோடி பேச்சு

'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா' என 11 ஆவது சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி இன்று அதிகாலையிலே தொடங்கி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதால் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

யோகா
யோகா

இந்நிகழ்ச்சியில் பேசியிருக்கும் பிரதமர் மோடி, "யோகா அனைவருக்கும் பொதுவானது, எல்லைகளற்றது. வயது, உடல் குறைபாடுகள் என அனைத்தையும் தாண்டி அனைவருக்குமானதாக இருக்கிறது.

இந்த யோகா தினம் மனிதக்குலத்திற்கானது. யோகா இப்போது உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

யோகா 2.0 இன் தொடக்கத்தைக் குறிக்கட்டும், இது அமைதியை உலகளாவிய கொள்கையைப் பறைசாற்றுகிறது. யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை." என்று பேசியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from India News https://ift.tt/4SuxHzK

Post a Comment

0 Comments