அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என மே 28ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தீர்ப்பின் தண்டனை விவரம் ஜுன் 2 ஆம் தேதி வெளியாகும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
குற்றவாளி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதால், 11 குற்றங்களுக்கும் தனித்தனியாக தண்டனை விபரங்களை நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார்.
சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக்கூடாது, நன்னடத்தை காரணமாக வெளியே வர இயலாது என்ற நிபந்தனைகளுடன், ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தார் நீதிபதி.
from India News https://ift.tt/XVtyTs5
0 Comments