ஓய்வு பெறும் 2 நாளுக்கு முன் சஸ்பெண்ட்; கீழக்கரை நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை.. என்ன காரணம்?

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வருபவர் ரெங்கநாயகி. மதுரையைச் சேர்ந்த இவர் நாளை (ஜுன் 30) பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் மதுரை மண்டல நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் முஜீபூர் ரகுமான் ரெங்கநாயகியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ரெங்கநாயகி ஏற்கெனவே காரைக்குடி மற்றும் மானாமதுரை நகராட்சி ஆணையாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் கீழக்கரை நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றார். இந்நிலையில், நாளை இவர் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் ஜுன் 27 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கீழக்கரை நகராட்சி

2020-ம் ஆண்டு காரைக்குடி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய ரெங்கநாயகி இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் அந்த வழக்கு விசாரணைக்கு ரெங்கநாயகி ஆஜராகமல் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தடையில்லா சான்றும் பெறவில்லை.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ரெங்கநாயகி

இதையடுத்து பணி ஓய்வு பெற இருந்த ரெங்கநாயகி நேற்று முன் தினம் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற இரண்டு நாள்களே இருந்த நிலையில் நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from India News https://ift.tt/sgHTFUn

Post a Comment

0 Comments