கோவை மாவட்டத்தில் பெண்களை குறி வைத்து செயின் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. வெளி மாவட்ட இளைஞர்கள் தொடங்கி காவல்துறை அதிகாரி வரை பலர் இந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்களை பீளமேடு போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணவேணி (37) மற்றும் அபிராமி (36). இவர்கள் சுய உதவி குழுக்கள் மூலம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளனர்.
ஆனால் அதை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் செயின் பறிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த கீதாமணி என்ற 54 வயது பெண் தன் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணவேணி மற்றும் அபிராமி அங்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளனர்.
தொடர்ந்து கீதாமணியிடம் உங்கள் கழுத்து பகுதியில் எறும்பு இருப்பதாக சொல்லி அதை தட்டி விடுவது போல சென்று.. அவரின் கழுத்தில் இருந்த 4.5 சவரன் தாலி செயினை பறித்து சென்றுள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டு.. அருகில் இருந்தவர்கள் சுதாரித்து விரட்டி சென்று இரண்டு பெண்களையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். கீதாமணி புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதேபோல கடந்த சில வாரங்களுக்கு முன்பு துடியலூர் அருகே உள்ள பெண்ணிடம் இந்த கும்பல் 5 சவரன் நகையை பறித்துள்ளது. மேலும் காந்தி மாநகர் பகுதியில் மற்றொரு பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவிவிட்டு செயின் பறிக்க முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

from India News https://ift.tt/9q4y0Sc
0 Comments