காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக வெளியான தகவலில், 78 வயதாகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, கடந்த வாரம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கெடுத்தார். அதற்குப் பிறகு அவர் வெளியே வரவில்லை. இந்த நிலையில், அவருக்கு வயிற்றுப் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், அவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று காலை 8:30 மணிக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பரிசோதனை முடிந்த பின்னர் இன்று வீடு திரும்புவார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தி பெரியதாக பொது வெளியில், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான அரசியல் வியூகங்களை வகுப்பதோடு நிறுத்திக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/i9F51MV
0 Comments