சில நாடுகளின் சட்டப்படி, குற்றவியல் தண்டனைப் பெற்றவர்கள் அந்த நாடுகளுக்குள் வர முடியாது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் 'ஹஸ் மனி (Hush Money)' வழக்கில் குற்றவாளி என்று உறுதிசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் அதிபராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை.
ஹஷ் மனி வழக்கில் டிரம்பிற்கு எந்தத் தண்டனையும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அவர் 'குற்றவாளி தான்' என்று மட்டும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முதலில் சொல்லியுள்ளதுபோல், பாதுகாப்பு மற்றும் சில காரணங்களுக்காக, குற்றவியல் தண்டனை பெற்ற ஒருவர் நாட்டிற்குள் நுழைய முடியாது. அப்படி பார்த்தால், டிரம்ப் குற்றவியல் தண்டனை பெற்றவர் ஆவார். இதனால், இவர் சில நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதில் சிக்கலை சந்திக்கலாம்.
இந்தியா, கனடா, லண்டன், ஜப்பான், இஸ்ரேல், சீனா, பிரேசில், கம்போடியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கியூபா, ஈரான், கென்யா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, தைவான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றவியல் குற்றவாளியை அனுமதிக்காது.
டிரம்ப் அதிபராக பதவியேற்றப் பிறகு, அவர் இந்த நாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டால், என்ன நடைமுறை கொண்டுவரப்படும் அல்லது இந்த நாடுகள் அவரை உள்ளேயே அனுமதிக்காதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
from India News https://ift.tt/tS8cYN9
0 Comments