நிர்மலா சீதாராமனின் 8-வது பட்ஜெட்..!
2025- 2026-ம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை நிகழ்த்துவார். காலை 11 மணியளவில் தொடங்கும் இந்த நிகழ்வில், இரு அவை உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், மக்களவையில் பிப்ரவரி 3, 4 ஆகிய இரு தினங்கள் நடைபெறும். இதற்கிடையில், நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்வார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட்.
இந்த பட்ஜெட் தாக்கல் மீது மூன்றுநாள்கள் விவாதம் நடக்கும். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி 6-ம் தேதி விவாதங்களுக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 27 அமர்வுகள் கொண்ட இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்கட்ட அமர்வு 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டாம்கட்ட அமர்வு மார்ச் 10-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதிவரை நடக்கும் எனக் கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை சிறப்பாக நடத்துவது தொடர்பாக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/w3SPb2u
0 Comments