``விஜய் மல்லையா சொத்தை விற்றதில் வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி திரும்பியது'' - நிர்மலா சீதாராமன்

தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமையோடு நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டும், கேள்வி எழுப்பப்பட்டும் வருகிறது.

இதையொட்டி, உதவித்தொகைகளுக்கான கூடுதல் கோரிக்கைகள் பற்றி பேசும்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இதுவரை அமலாக்கத்துறை பல்வேறு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் ரூ.22,280 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டுள்ளது. இதில் நாட்டை விட்டு ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா மற்றும் வைர வியாபாரி நீரவ் மோடியின் மோசடிகளும் அடக்கம்.

மல்லையா, நீரவ் மோடி

விஜய் மல்லையாவின் பல்வேறு சொத்துகளை விற்று ரூ.14,000 கோடியை அவர் கடன் வாங்கியிருந்த பல வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டது. இதே மாதிரி நீரவ் மோடியின் சொத்துகளும் ரூ.1,053 கோடிக்கு விற்கப்பட்டு வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து ரூ.13,000 கோடியை கடனாக பெற்றுவிட்டு நாட்டை விட்டு நீரவ் மோடியுடன் ஓடிய இன்னொரு வைர வியாபாரியான மெகுல் சோக்ஷியின் சொத்துகளை விற்கவும் அமலாக்கத்துறை மற்றும் வங்கி மும்பை சிறப்பு நீதிமன்றத்தை நாடியது.

அதற்கு, சிறப்பு நீதிமன்றம் மெகுல் சோக்ஷியின் ரூ.2,566 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏலமிட்டு, அந்தத் தொகையை பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டாக முதலீடு செய்ய அனுமதி வழங்கியுள்ளது" என்று பேசினார்.

மேலும் அவரிடம் அமலாக்கத்துறையை பற்றி கேட்டப்போது, "அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட சொத்துகளை உண்மையான உரிமையாளர்களிடம் சேர்ப்பதில் சிறப்பாக செயல்படுகிறது" என்று பதில் கூறினார்.



from India News https://ift.tt/CzJsBNQ

Post a Comment

0 Comments