TVK Vijay: ``2026 தேர்தலில் தருமபுரி தொகுதியில் விஜய் போட்டியிடுவார்'' -த.வெ.க மாவட்டத் தலைவர் சிவா

'தமிழக வெற்றிக் கழகம்' முதல் மாநாட்டில் விஜய் உரையாற்றியது பெரும் பேசுபொருளானதை அடுத்து, விஜய் எந்தத் தொகுதியில் போட்டிடப்போகிறார் என்பதுதான் 'த.வெ.க'வினரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில் 'த.வெ.க' கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் சிவா தலைமையில் நேற்று (நவம்பர் 17) தருமபுரி மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சிவா, வரும் 2026 தேர்தலில் தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் விஜய்யிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதை விஜய் ஏற்றுக் கொண்டு அறிவிக்கச் சொன்னதாகவும் பேசியிருக்கிறார்.

சிவா

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், "2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் தருமபுரியில் உள்ள ஐந்து தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என உறுதியாகக் கூறுகிறேன். தருமபுரி மண் அதியமான் பிறந்த மண், அவ்வையார் வாழ்ந்த மண். எங்கள் தொகுதியில் நீங்கள் நின்று முதலமைச்சர் ஆக வேண்டும் என கோரிக்கை வைத்தோம். கோரிக்கையை ஏற்று தருமபுரியில், போட்டியிடுவதாக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார். 'இந்த அறிவிப்பை பொதுவெளியில் அறிவிக்கலாமா? 'என்று கேட்டேன். அதற்கு 'அறிவிப்பைக் கொடுங்கள்' என்றார் தலைவர் விஜய். இச்செய்தியை இக்கூட்டத்தின் வாயிலாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு காணாத மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நமது தலைவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று பேசியிருக்கிறார் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் சிவா.

'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் தலைமையிலிருந்து இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் அறிவிக்கப்படாத நிலையில் 'த.வெ.க' கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் சிவா இதுகுறித்து பேசியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb



from India News https://ift.tt/en1JKHL

Post a Comment

0 Comments