TVK: டார்கெட் 'FIRST TIME VOTERS'; பூத் கமிட்டிக்கு 3 மாத கெடு- நிர்வாகிகளுக்கு விஜய் கொடுத்த டாஸ்க்

விக்கிரவாண்டி மாநாட்டுக்குப் பிறகு அமைதியாக இருக்கிறது விஜய்யின் த.வெ.க முகாம். இடையில் நவம்பர் 3-ம் தேதி செயற்குழுக் கூட்டத்தை கூட்டி சில தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றியிருந்தார்கள். இந்நிலையில், விஜய் மாநாட்டுக்கு நிலம் கொடுத்தவர்களை நேரில் அழைத்து கௌரவிக்கவிருக்கிறார், டிவி சேனல் ஒன்றை தொடங்கவிருக்கிறார் என எக்கச்சக்க தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.

TVK - விஜய்
உண்மையிலேயே த.வெ.க முகாமில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிய சில நிர்வாகிகளை தொடர்புகொண்டு பேசினோம். கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக நிர்வாகிகளுக்கு விஜய் நிறைய டாஸ்க்குகளை கொடுத்திருப்பதாக சொல்லி பரபரக்கிறார்கள் அவர்கள்.
TVK: விஜய்

நம்மிடம் பேசிய சில நிர்வாகிகள், 'தளபதி டிவி சேனல் தொடங்கப்போகிறார், மாநாட்டுக்கு நிலம் கொடுத்தவர்களை நேரில் சந்திக்கப் போகிறார் என தினம் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் நிர்வாகிகளுக்கு எந்த மெசேஜூம் சொல்லப்படவில்லை. இப்போதைக்கு கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த சொல்லித்தான் எங்களுக்கு சில டார்கெட்களை தலைமை கொடுத்திருக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தம் மேற்கொள்வதற்குமான முகாம்கள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த முகாம்கள் குறித்த விழிப்புணர்வை முதல் முறை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தி அதிகப்படியான இளைஞர்களை வாக்காளர் பட்டியலுக்குள் இழுத்து வாருங்கள்.

நம்முடைய பெரும்பலமாக அவர்கள்தான் இருக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இதில் அதிக கவனம் செலுத்துங்கள் என தலைமை சொல்லியிருக்கிறது. நாங்களும் சமூக வலைதளங்களில் இதுசார்ந்து நிறைய விழிப்புணர்வு பதிவுகளை வெளியிட்டு வருகிறோம். போஸ்டர்கள் மூலமும் பரப்புரை செய்து வருகிறோம்.

அதுபோக, பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் எந்தளவுக்கு முடிந்திருக்கிறது என்பது பற்றியும் ஒரு ரிப்போர்ட் தளபதிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. பூத்துக்கு 5 பேர் என 100% பணிகள் முடிந்த மாவட்டங்கள், 60% வரை பணிகள் முடிந்த மாவட்டங்கள், அதற்கு கீழ் பணிகள் முடிந்த மாவட்டங்கள் என மூன்று கேட்டகரிகளாக பிரித்திருக்கிறார்கள்.

TVK Vijay
கொங்கு மண்டலத்திலும் வட மாவட்டங்களில் சில பகுதிகளிலும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து வலுவாக இருப்பதாக தளபதியிடம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் தென் மாவட்டங்கள் கொஞ்சம் வீக்காக இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட தளபதி இன்னும் 3 மாதங்களில் பூத் கமிட்டிகளை முழுமையாக அமைத்து முடிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

அதுபோக, இப்போது வரைக்குமே மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள்தான் கட்சிப் பணிகளையும் பார்த்து வருகிறார்கள். அந்த செட்டப்பை முழுமையாக நீக்கிவிட்டு கட்சிக்கென புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்கவிருக்கிறார்கள். அதற்காகத்தான் அணிகளுக்குள் முரண்பாடுகள் இருக்கும் சில மாவட்டங்களுக்கு மட்டும் நேரில் சென்று மாவட்டச் செயலாளர் பொறுப்பு பற்றி ஆலோசித்து வருகிறார். இன்னும் 15-20 நாட்களில் புதிய மாவட்டச் செயலாளர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.' என்றனர் த.வெ.க வட்டாரத்தினர்.

tvk vijay

மாநாட்டுக்குப் பிறகு சில மாவட்டங்களில் மற்ற கட்சியினர் த.வெ.க-வில் இணைய ஆர்வம் காட்டினார்களாம். அதற்காக மண்டபங்களை பிடித்து இணைப்பு விழாக்களை நடத்தவும் நிர்வாகிகள் தயாராகியிருக்கிறார்கள். ஆனால், இப்போதைக்கு அப்படி மாற்றுக் கட்சியினர் யாரையும் இணைக்கும் விழாக்களை நடத்த வேண்டாம் என தலைமையிடமிருந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், செயற்குழுக் கூட்டத்துக்காக முக்கிய நிர்வாகிகள் பனையூர் வந்திருந்த போதும் எந்தக் கட்சித் தலைவர்களையும் நிர்வாகிகளையும் தீவிரமாக தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது என்றும் விஜய் கண்டிப்பாக கூறியிருக்கிறார்.

TVK

'செயற்குழுக் கூட்டத்தின் போது ஒவ்வொரு நிர்வாகி சொன்ன கருத்தையும் தளபதி உன்னிப்பாக கவனித்துக் கேட்டார். சமீபத்தில் சர்ச்சையை கிளப்பிய சீமான் விவகாரம் பற்றி ஒரு மாவட்டத் தலைவர் பேசி அவருக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். உடனே 'மைக்கை பக்கத்தில் இருப்பவரிடம் கொடுங்கள்!' என அந்தப் பேச்சை வளர்க்காமல் அப்படியே கடந்து போய்விட்டார். அதன்பிறகுதான், எந்தத் தலைவரையும் இறங்கி விமர்சித்து தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடக் கூடாது. கருத்துக்கு பதில் கருத்தை முன் வையுங்கள் போதும் என்றார்.' என்கின்றனர். இதனைத் தொடர்ந்துதான் சீமானின் பிறந்தநாளுக்கு விஜய்யும் X தளத்தில் வாழ்த்து சொன்ன சம்பவமும் நடந்திருக்கிறது.

நவம்பர் 3 ஆம் தேதி நடந்த அந்த நிகழ்வில் விஜய் நிர்வாகிகள் மத்தியில் எமோஷனலும் ஆகியிருக்கிறார். 'விக்கிரவாண்டியில என்னைய நம்பி அத்தனை லட்சம் மக்கள் கூடியிருக்காங்க. அவங்க அன்புல என் மனசு கலங்கி போயிருச்சு. அந்த அன்புக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன். விக்கிரவாண்டில இருந்து சென்னை வர வரைக்கும் என் மனசுல இந்த ஒரு கேள்விதான் ஓடிக்கிட்டே இருந்துச்சு...' என எமோஷனல் ஆகியிருக்கிறார்.

Vijay
நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்ட போதும் 'நாமெல்லாம் சேர்ந்து ஜெயிப்போம் நண்பா...' என ஒவ்வொரு நிர்வாகியிடமும் கூறி மகிழ்ந்திருக்கிறார்.


from India News https://ift.tt/witAgm5

Post a Comment

0 Comments