வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் வட இலங்கைப் பகுதியில் பலத்தக் காற்றுடன் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு இலங்கைப் பகுதி கனமழை வெள்ளதால் பாதிப்படைந்துள்ளது. இலங்கையில் மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்தக் காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 12 மணி நேரத்தில் 'ஃபெங்கல்' புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நாளை நவம்பர் 29, 30ம் தேதிகளில் இந்தப் புயல் சென்னை மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் இடையே கடந்து செல்லவிருக்கிறது. இதனால் இன்றே சென்னை, புதுச்சேரி, கரைக்கால் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்தக் காற்றுடன் கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு சற்று முன்னெச்சரிக்கையுடன் இந்தப் புயலையும், கனமழையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் நவம்பர் 29, 30ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இப்பகுதிகளில் இன்று இரவு முதலே மழைக்கான வாய்ப்பிருப்பதாகவும் சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் கூறிகின்றனர்.
இதுபற்றி கூறியிருக்கும் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர், "நவம்பர் 30ம் தேதி சென்னை மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி, கரைக்கால், நாகப்பட்டினம் இடையே புயல் கடக்கவிருக்கிறது.
அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இப்படித்தான் இருக்கும்
நவம்பர் 28ம் தேதி - மிதமான மழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கரைக்கால் உள்ளிட்ட வட கடலோர பகுதிகளில் இன்று இரவு முதலே மிதமான மழை தொடங்கவிருக்கிறது.
Let's not make any confusions!
— Delta Weatherman (Hemachander R) (@Deltarains) November 28, 2024
Just apart from #CycloneFengal!
The system likely to make landfall between Chennai (Mahaballipuram) and Nagapattinam especially at #Cuddalore & #Pudhucherry as a Deep depression/Marginal cyclone by Nov 30th, 2024.
==> End of the day it's IMD's… pic.twitter.com/BJhnts8fCX
நவம்பர் 28ம் தேதி மற்றும் 30 தேதிகள் - அதிகனமழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிகவும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னை மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் 40கி.மீ. முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்தக் காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார். சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து விரைவில் விரிவான அறிவிப்பை கொடுக்கவுள்ளது.
புயல், கனமழை, பலத்தக் காற்று உள்ளிட்ட இந்த வானிலை நிலவரங்கள் குறித்தத் தகவல்கள் முன்னெச்சரிக்கையுடன் அரசும், மக்களும் செயல்பட்டு வானிலையை எதிர்கொள்ளத்தானே தவிர, அச்சமடைவதற்காக அல்ல. வரும்முன் காப்பதே சிறந்தது. பாதுகாப்புடன் கனமழையை எதிர்கொள்வோம்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MadrasNallaMadras

from India News https://ift.tt/mvsxKMr
0 Comments