Canada: பிரதமர் மோடி கண்டனம்... ``ஜஸ்டின் ட்ரூடோ ஒரு முட்டாள்'' முன்னாள் கனடா அமைச்சர் காட்டம்!

நாளுக்கு நாள் இந்தியா - கனடா உறவு மோசமடைந்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில், 'தனி நாடு வேண்டும்' என கனடாவில் உள்ள இந்து கோயில் மீது காலிஸ்தான் ஆதாரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "கனடாவில் உள்ள இந்து கோயில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறேன். இது இந்திய தூதர்களை பயமுறுத்துவதற்காக செய்யப்படும் கோழைத்தனமான முயற்சிகள் ஆகும். இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசு நீதியையும், சட்டத்தையும் நிலைநாட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி

கனடாவில் நடந்த தாக்குதல் குறித்து தற்போது அலுவல் ரீதியாக ஆஸ்திரேலியா சென்றிருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கனடாவில் உள்ள இந்து கோவிலில் நேற்று நடந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது" என்று ஆஸ்திரேலியா பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் கூறியுள்ளார்.

கனடாவில் நடந்து வரும் காலிஸ்தான் பிரச்னை குறித்து முன்னாள் கனடா அமைச்சர் மற்றும் சீக்கியருமான உஜ்ஜல் தோசன்ஜ் கனடா செய்திதாள் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், "பெரும்பாலான சீக்கியர்களுக்கு காலிஸ்தான் பற்றிய எண்ணமில்லை. இதை வெளியில் சொன்னப்பிறகு நடக்கவிருக்கும் வன்முறைகளை எண்ணித்தான் அவர்கள் இந்த எண்ணத்தை வெளிப்படுத்துவதில்லை.

முன்னாள் கனடா அமைச்சர் மற்றும் சீக்கியருமான உஜ்ஜல் தோசன்ஜ்

ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையான சீக்கியர்களின் எண்ணத்தை தெரிந்துகொள்ளவில்லை. அந்த சீக்கியர்கள் கோயிலுக்கும் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரூடோ சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒரு 'முட்டாள்'. ஏனெனில் கனடாவில் இருக்கும் கிட்டதட்ட 8 லட்சம் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் கோரிக்கையில் உடன்பாடில்லை. வெறும் ஐந்து சதவீதம் அல்லது அதற்கும் குறைவானவர்களே இந்த கோரிக்கையை முன்வைக்கின்றனர்" என்று பேசியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb



from India News https://ift.tt/aK8Cpg3

Post a Comment

0 Comments