இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முன்னிலை வகிக்கும் அநுர குமார திசாநாயக்காவின் என்பிபி கட்சி

கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.

அதில், தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று அதிபரானார். அனுராவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 3 எம்.பிக்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய சட்டங்களை நிறைவேற்ற பெரும்பான்மை பலம் வேண்டும் என்பதால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் 225 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று (14.11.2024) நடைபெற்றது.

அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி, சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 4 மணிக்கு முடிந்தது. உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இந்நிலையில் தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கியுள்ளன. இதில், பெரும்பான்மை இடங்களை தேசிய மக்கள் சக்தி பிடிக்கும் என்றே தெரிகிறது.

தபால் வாக்குகளில் அனைத்து இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது தேசிய மக்கள் சக்தி. மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் தற்போது வரை 16 தேர்தல் மாவட்டங்களில் தபால் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அங்கெல்லாம் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அநுராவின் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது.

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 11 சதவிகித வாக்குகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவுடன் களமிறங்கிய தேசிய ஜனநாயக முன்னணி 5 சதவிகித வாக்குகள் மட்டுமே தற்போதைய நிலையில் பெற்றிருக்கின்றன. அதேபோல திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சிக்கு மொத்தம் உள்ள 4 இடங்களில் ஒரே ஒரு இடம்தான் கிடைத்தது. ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி 2 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb



from India News https://ift.tt/HRykU6n

Post a Comment

0 Comments