``இளைஞர்களிடையே பக்தி குறைவு..!" - தமிழகத்தில் பருவம் தவறிய மழைக்கு மதுரை ஆதீனம் சொல்லும் `காரணம்’

அவ்வப்போது அதிரடியாக பேசி சர்ச்சைக்குள் சிக்கிக் கொள்வது மதுரை ஆதீனத்தின் வழக்கமாகி வருகிறது. மதுரையில் நடந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 வது நினைவு நாளை முன்னிட்டு பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மதுரை ஆதீனம், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மதுரை ஆதீனம்

"இன்றைய தலைமுறையினர் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். அரசு இளைஞர்களுக்கு  விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மதுரை ஆதீனம் சார்பாக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன், அவர்கள் இல்லையென்றால் நான் இன்று இல்லை.

மதுரை ஆதீனம்

தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழைக்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பதுதான் காரணம், கோயில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை செலுத்துவதில்லை" என்றவரிடம், நடிகர் விஜய் மாநாடு குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பியதும் அங்கிருந்து உடனே நகர்ந்தார் மதுரை ஆதீனம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/a2vl6QC

Post a Comment

0 Comments